2024 அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தீர்மானம்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடந்த விழாவில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ளார்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை, செனட் சபை தேர்தல் முடிவுகள் ஆளும் ஜனநாயக கட்சிக்கே சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK