ஆசிய கிண்ணத்தை ஆறாவது முறையாகவும் கைப்பற்றியது இலங்கை


 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.


இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் சார்பாக மொஹமட் ரிஸ்வான் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, 2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post