மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுவதற்கும், அனைத்து பொது கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

“தேசிய துக்க தினம் பின்னர் அறிவிக்கப்படும்” என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது