கர்ப்பிணித்தாய்மார்கள், பிள்ளைகள் போசனை குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றமைக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் - பாராளுமன்றில் இம்ரான் எம் பி வலியுறுத்தல்


போசாக்கு குறைபாட்டின் காரணமாக தாய்மார்கள் குருதிச்சோகையினால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது, கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவசியப்படுகின்ற திரிபோஷா இடைநிறுத்தப்படுள்ளது. திரிபோஷா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கர்ப்பிணித்தாய்மார்கள், பிள்ளைகள் போசனை குறைபாட்டினால் அ பாதிக்கப்படுகின்றமைக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் சிறுவர் மற்றும் தாய்மார்களுடைய குறைபோசனை பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது பா உ இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியினால் கற்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை நோய் அதிகமாக வருவதாகவும் இதனால் தாய்மார்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் பிள்ளைகளின் வளர்ச்சி வீதம் குறைவடைதாகவும், நிறை குறைகின்ற நிலைமை அதிகரிப்பதாகவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கூடுதலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று கற்பிணித்தாய்மார்களுக்கு இலவசமாக செய்யப்பட்ட குருதிப்பரிசோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலைக்கு செல்லவேண்டியிருப்பதாகவும் மற்றும் குடும்நல உத்தியோகத்தர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் மேற்குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு வழக்கப்படவேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.