இன்று முதல் வெட் வரி அதிகரிப்பு


 வெட் வரி என அழைக்கப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக இன்று முதல் உயர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போதே அவர், வெட் வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை தொடர்ந்தே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது வழக்கமாகும்


எனினும்  நாளைய தினம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK