ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மாறுப்பட்ட விலைகளில் பாண் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில், பாண் விற்பனை செய்வதன் ஊடாக தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்குவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது