22 ஆவது திருத்தம் – உயர்நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு


 22 ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.


அதற்கமைய, 22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி அறிவித்தது.

அதன்படி இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்தார்

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK