பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) 15ஆக உயரும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.