செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய மின்கட்டணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 


நேற்று (26) பிற்பகல் முதல் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென பழுதடைந்தது. 

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரமும் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழந்துள்ளது.