முட்டை விற்பனைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று இரவு குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 43 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சிவப்பு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 45 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்யப்பட்டால், ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.