பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை இன்று நீக்கியுள்ளது.

இலங்கைக்கு மேற்கொள்ளும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

முன்னதாக குறித்த நாடுகள், இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பயண ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.