முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு மீண்டும் வருகை தரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இத் தகவலை வெளியிட்டுள்ளார்.