கடந்த ஜுலை 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த தானிஸ் அலிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


குறித்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது