அரச செலவீனங்களை கட்டுப்படுத்த தீர்மானம்


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரச செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, அரச அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது அல்லது புதிய குத்தகை அல்லது குத்தகை ஒப்பந்தங்களை மேற்கொள்வதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச தேவைகளுக்காக வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போதுள்ள ஒப்பந்தங்களை நீடிப்பதற்கு முன்னர் திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயன்றவரை காகித பாவனையை குறைத்து தேவையான செயற்பாடுகளை இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் ஊடாக மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK