பிரதமர் ரணிலின் கருத்துகள் வானிலை அறிக்கை போன்று இருக்கிறது: இம்ரான் மகரூப் எம்பி


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அறிக்கைகளை பார்க்கின்ற பொழுது,  வானிலை அறிக்கை சொல்வது போல் தென்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் பேசினார். பிரதமரினால்  சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இன்று உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.

மக்களும் நாடும் இன்று எதிர்கொள்ளும்  இந்த பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை முன் வைப்பார் என்று தான் நாம் எதிர்பார்த்தோம். அப்படி நடக்கவில்லை.பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது ;

 " இரண்டு நேர உணவுதான் உண்ணவேண்டும் ; இன்னும் இரண்டு வாரங்களில் நெருக்கடி நிலை மோசமாக இருக்கும்; மிகவும் மோசமான பஞ்சம் உருவாகப் போகிறது; சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுகிறேன்.... அரசியலமைப்புக்கான 21வது திருத்தம் உடனடியாக அவசியம் என்றார்..." இவையெல்லாம் வானிலை அறிக்கை போன்றுதான் இருக்கிறது.

நெருக்கடி நிலைக்கு தீர்வு காண பொறுப்பை ஏற்றவர், அது  தொடர்பாகவே நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

நாட்டில் கொலை, கொள்ளை,பசி, பட்டினி எல்லாம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளில் இதன் முக்கிய பிரச்சனைகளை விட மிக மோசமான பிரச்சனைகளை நாமும் நமது நாடும் எதிர் கொள்கின்றோம்.

மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்படாத இருக்கின்ற நிலையில், பொருட்களினதும்  வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த நிலையில்,நாடு

எப்படியான நெருக்கடியில் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமே ஒழிய கருத்துக்களை மாத்திரம் சொல்லி விட்டு தப்ப முடியாது  என்றும் கூறினார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK