பதவிக்காக சமூகத் துரோகியாய் மாறி அரசியலில் தற்கொலை செய்து கொண்ட முஷாரப்!


கிழக்கு மாகாணத்தின் திகாமடுல்ல மாவட்டத்தின்  மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் சென்று, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள், சமூகத்திற்காக பேசிய மேடைப் பேச்சுக்கள், இன்னும் மக்கள் காதுகளிலிருந்து ஓயாத நிலையில்,  தம்மை தெரிவு செய்த மக்களுக்கே துரோகம் செய்துபதவிக்காக அரசின் பக்கம் சாய்ந்தவர் முஷாரப்.

முஸ்லிம் சமுதாயம், முஸ்லிம் உரிமைகள், இனவாதம்,  மொட்டு ஹராம், ஹாராத்தின் பக்கம் ஒரு முஸ்லிம் நெருங்கக் கூடாது, என மக்களிடம் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றார்.

பாராளுமன்றம் சென்று சில காலங்களிலேயே சிறுபான்மையை குறிவைத்து, முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் முஸ்லிம் சமூகத்தை பழிவாங்கும் விதமாக கொண்டுவரப்பட்ட 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் முலம்,  தான் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கும், தான் நிலைகொண்டுள்ள தூய மார்க்கத்துக்கும், தன்னை தூக்கி விட்ட சமூகத்திற்கும் துரோகம் செய்து, இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் நிலை வகிக்கும் சரித்திரத்திரம் சான்று பகரக்கூடிய ஒரு சமூகத் துரோகியாக மாறினார்.

அது மட்டுமின்றி நாடு தற்போது உள்ள அவலமான நிலையில், மக்கள் உணவுக்காகவும், பச்சிளங்குழந்தைகள் பசிக்காகவும், கதரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையில்,  தன்னை ஏற்றி விட்ட ஏணிக்கு எட்டி உதைக்கும் விதமாக சமூக துரோகியாக மட்டுமின்றி கஷ்டங்களினால் துடித்துக் கொண்டிருக்கும் மொத்த மனித குலத்தின் எதிரியாவும் மாறியுள்ளார்.

இலங்கை அரசியலில் காலத்துக்கு காலம் பணத்திற்கும் பதவிக்கும் விலை போகும்  முஸ்லிம்  கட்சிகளால், முஸ்லிம் சமூகம்  அவமானத்துக்கு உள்ளாகும் நிலையில்,

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இவரின் நடவடிக்கை அமைந்துள்ளது. 

ஜனாதிபதியை பதவியில் இருந்து  மூன்று வருடங்களுக்கு இறக்க முடியாது என குறிப்பிடும் இவர், இவ்வளவு  காலமும் அரசிலில் பயணித்து, தான் பாரளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அரசின் போக்கை விமர்சித்தும் அறிவித்திருந்தமை குறிபிடத்தக்க விடயமாகும்  .

அண்மைக் காலம் வரையில் அரசின் போக்கை விமர்சித்த இவருக்கு, நாட்டில்  இனவாதத்தை வளர்த்து , இனவாத வெறிக்காக 20 நாள்  பச்சிளம் பாலகனை கொழுத்துவிடெரியும் நெருப்பில் கொழுத்திய கொடுங்கோள்  அரசின் போக்கு சரி என்றும், தான் சேர்ந்திருந்த எதிர்கட்சியினர் பொய்யில்

பயனிக்கின்றார்கள் என்பதையும் சில  தினங்களுக்க முன்னே ஊகிக்க முடிந்ததை நோக்கும் போது வியப்பாகவே உள்ளது.

செய்யாத குற்றத்துக்காக முஸ்லிம் சமூகத்தை சிறையில் அடைத்து, பள்ளி வாசல்கள் மதரஸாக்கள் மீது

குற்றங்களை சுமத்தி, 7200 அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை சிறையில் அடைத்து , பதவி வெறிக்காக பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்த  முஸ்லிம் சமூகத்தின் தாய் மார்களினதும் சகோதரிகளினதும் பார்தாவைவையும், ஹிஜாபையும்  நடுவீதியில் வைத்து அகற்றிய இனவாத அரசின் போக்கை சரியென  தான் தற்போது தான் உணர்ந்துள்ளாராம். 

முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமூகம் என  முதலைக் கண்ணீர் வடித்து பதவியை பெற்றுக் கொண்டு சமூகத்திற்கு முதுகில் குத்தும் முஷாரபைவிட தான் முஸ்லிம் சமூகத்தின் நேர் எதிரி என தன்னை பிரகடனம் செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மூஞ்சில் குத்தும் ஞானஸார தேரர்  சிறந்தவர் என்பதே உண்மை .

ராஜபக்ஸ அரசில் ராஜபக்ஸ குடும்பத்தை தவிர அமைச்களுக்கே ஒரு ஆணியையும் புடுங்க முடியாத நிலையில் தனக்கு கிடைத்திருப்பது சக்கர நாற்காலி மட்டுமே  என்பதை உணர இவருக்கு நீண்ட காலம்  தேவை இல்லை.

ஜனாதிபதி பதவி விலக முடியாது. தொடர்ந்தது பதவி வகிப்பார். ஆக தான் மூன்று வருடங்களுக்கு அமைச்சராக இருக்க முடியும் எனவும் தன்னை ஆற் கொண்ட பதவி மோகத்தினால் இவர் கனவுலகில் மூழ்கித் திளைக்கின்றார் என்பதே உண்மை.

ஜனாதிபதி மூன்று வருடங்கள் பதவி வகிப்பது எவ்வாறாயினும், இலங்கை  தொடர்ச்சியாக சர்வதே உலகத்தின் மனித உரிமை சம்பந்தமா எச்சரிக்கைகளையும் ஐ.நா போன்ற முக்கிய அமைப்புக்களின் கட்டளைகளையும் புறக்கணித்ததும் இன்றைய நிலைக்கு ஒரு முக்கிய மறைமுகமான காரனமாககும்.

இதன் காரணமாகவே இலங்கை இன்று சர்வதேச ரீதியில் கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

உதாரணமா GSP+ சலுகை இன்னும் இலங்கைக்கு உத்தியோக பூர்வமாக நிறுத்தப்பட்டாத போதிலும், சர்வதேச GSP+  இல் அடங்கும் பொருட்களுக்கான கேள்வி

இலங்கைக்கு குறைந்து செல்வதிலும்,  பங்கதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளு‌க்கு அதிகரித்துச் சொல்வதையும் இலங்கையின் மற்றும் அந்த நாட்டு மொத்த தேசிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி  புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கான சர்வதேசத்தின் மறைமுகமான செயற்பாடுகள் பழிவாங்கள் தெ‌ளிவாக காட்டுகின்றன.

எனவே சர்வதேசத்தை புறக்கணித்து நடக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் மறைமுகமான சர்வதேச திட்டங்களையும், சர்வதேசத்தை புறக்கணித்து  செயல்படும் அரசாங்கத்தின் ஆயுள்காலத்தையும் ஊகிக்க அரசியல் சாணக்கியம் இல்லாத இவர்,  முன்று வருட அமைச்சுப் பதவி  எவ்வாராயினும் இன்னும் சிறிது நாட்களில் அரசாங்கத்தின்  உறுதிப்பாட்டை உணர்ந்து கொள்வார் என்பதே உண்மை.

இளம் வயதினராக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வளவோ சாதிக்க வாய்ப்புக்கள் இருந்தும், பதவிக்கும் பணத்திற்குமாக அரசியலில்  தற்கொலை செய்து கொண்டார் என்பதை இன்னும் சிறிது நாட்களில் உணரத்தான் போகின்றார்.

இவர் போன்ற ஒரு துரோகியிடம் தலைவன் என நினைத்து முஸ்லிம் சமூகம் ஏமாந்து விட்டதை மக்கள் ஆதங்களில் இருந்து வெளிப்டுவதை காணமுடின்கிறது.

ஆக, முஸ்லிம் கட்சிகள் என்ற பெயரில் காலத்திற்குக் காலம் தனியுரிமை  தனித்துவம் என்ற கோசத்தை ஏந்தி வரும் துரோகிகளுக்கும், காவாலிகளுக்கு‌ம் , பணத்திற்கும் பதவிக்கும் சமூகத்தின் மானத்தை வாங்கி உரிமைகளை விற்றுப் பிழைக்கும் அரசியல் வியாபாரத்திற்கு முஸ்லிம் சமூகம் இனியாவது சந்தித்து முற்றுப் புள்ளி வைக்கட்டும்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK