அரசாங்கத்திற்கு மைத்திரிபால ஒரு வார கால அவகாசம்


தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் வகித்து வந்த அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்து அடுத்த சில தினங்களில் பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்திலேயே இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி, காபந்து அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஆளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்காக இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரு நிலையான வேலைத்திட்டம் உள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK