அலரிமாளிகை உட்பட கேந்திர முக்கியத்துவ பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஈஸ்டர் அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டி தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காலிமுகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் திரள்வதனால் கொழும்பு உட்பட அந்தப் பிரதேசத்தில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 காலிமுகத்திடலில் திரண்டு இருக்கின்ற இளைஞர்களும் யுவதிகளும் வீதி போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் வீதியின் அருகில்

  நின்று   கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK