பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர்


பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்திட வேண்டும் என அதிபரிடம் கோரிக்கை வைத்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வந்தன.

இந்த நிலையில், பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அதிபர் ஆரிஃப் ஆல்வி, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாள்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK