சுகாதார அமைச்சுக்குள் சர்ச்சைக்குரிய பெண் - ரகசியங்கள் கசிந்தமை எப்படி?


பவித்ரா வன்னிஆராச்சி சுகாதார அமைச்சில் இருந்து விலகிய பின்னர் அந்த அமைச்சில் இருந்த மூன்றரை லட்சம் பெறுமதியான கணினி உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றி பெண் ஊழியர் ஒருவரால் இவை திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழியர் சுகாதார அமைச்சில் எழுத்தராக பணியாற்றியுள்ளார்.

அமைச்சரவை திருத்தத்தின் பின்னர் கடந்த புதன்கிழமை குறித்த பணிப்பெண் சுகாதார அமைச்சின் லேஸர் கலர் பிரின்டர் மற்றும் அதற்கான நிறங்களை கொண்டு சென்றுள்ளார்.

இந்த உபகரணங்கள் பவித்ரா வன்னிஆராச்சி சுகாதார அமைச்சராக செயற்பட்ட போது பயன்படுத்தி பொருட்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த உபகரணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அமைச்சின் பாதுகாப்பு பிரிவினை அவர் சோதனையிட்டுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளில் அந்த பணிப்பெண் இரகசியமாக அதனை கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி செயற்படும் போது அவரது தனிப்பட்ட உதவியாளராக இந்த பெண் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பெண் தடுப்பூசி செலுத்துவது உட்பட சுகாதார அமைச்சின் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவர் தலையிட்டு செயற்பட்டுள்ளதாக சுகாதார தகவல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் எடுக்கும் தீர்மானங்களை தொழிற்சங்கத்திடம் வழங்கவும் அந்த பெண் செயற்பட்டுள்ளார். அந்த பெண் தற்போது போக்குவரத்து அமைச்சில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK