சில ஊடகங்கள் பல முறைகள் ஹிசாலினியை தீயிட்டு கொளுத்தி வருகின்றன


ஹிசாலினி ஒரு முறைதான் தீ குளித்தாள் ஆனால் சில ஊடகங்கள் பல முறைகள் அவளை தீயிட்டு கொளுத்தி வருகின்றன.

இந்த சிறுமியின் சாவுக்கு நிச்சயம் நீதி வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வரவேண்டுமே தவிர ரிசாட்டுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூச்சல் போடுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஏனென்றால் அவருக்கு வேறு பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும். 

ஆகவே! இந்த விடயத்தை சமுக பிரச்சினையாக மாற்ற முற்பட வேண்டாம்.

முக்கியமாக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய ஹிசாலினி விடயம் மறைந்து போய்விடும். யார்? குற்றம் செய்தாலும் அவர்கள் தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள். 

சிறுமியை வேலைக்கு அனுப்பியது முதல், இடைத்தரகர், மற்றும் வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை அனைவரும் இங்கு குற்றவாளிகளே!

ஆனால் அதைவிடவும் முக்கிய குற்றவாளிகள்   மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளே!

சிறுவர்களுக்கு அடிப்படை கல்வியைக்கூட வழங்காது, அவர்களை வேலைக்கு அனுப்பும் அளவுக்கு மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை கண்டுகொள்ளாத சில அரசியல்வாதிகளும் இந்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். 

வெறுமனே அடுத்த தேர்தலுக்கு வாக்கு தேடுவதற்காக ஆர்ப்பாட்டங்களில் கலந்துவிட்டு பேசி கூப்பாடு போட்டுவிட்டு, தங்களின் பொறுப்பை இதன்மூலம் மறைக்க முற்படக்கூடாது.

ஹிசாலினியின் துயரம் ஒரு வீடு என்றால் இன்னும் இன்னும் எத்தனை சொகுசு வீடுகள் அதில் எத்தனை ஹிசாலினிகள்?

நாங்கள் பெண் பிள்ளைகளை மட்டும்தான் இன்று பார்க்கிறோம். ஆனால் பல வருடங்களாக கொழும்பின் பல வேலைத்தளங்களில் எத்தனை மலையக ஆண் பிள்ளைகள் சொல்லொன்னா துயரங்களை அனுபவிக்கின்றனர் என்பதை கண்டுகொள்வதே இல்லை.

முதலில் மலையக மக்களை ஏமாற்றி அவர்களின் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தும் புரோக்கர்களை ஒழிக்க வேண்டும்.

ஆகவே! கொஞ்சம் சிந்தித்து ஹிசாலினிக்கு நீதி கிடைக்க போராடுவோம்.!!!

நன்றி 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK