குவைத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்!


குவைத்தில் அமைதியான முறையில் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி ,அங்கு 50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 29 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் வாக்குப் பெட்டிகளை பிரித்து வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர்.

இப்பணிகள் முடிந்தவுடன் குவைத்தின் அமீர் புதிய பிரதமரை தேர்வு செய்வார். அந்த பிரதமரின் தலைமையில் அமைச்சரவை செயற்படத் தொடங்கும் என்றும் தற்போதுள்ள அரசு தேர்தலுக்கு பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்யும் எனவும் கூறப்படுகின்றது,

0/Post a Comment/Comments

Previous Post Next Post