வவுனியாவில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டியதையடுத்து முகக்கவசத்தை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பெற்று அணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாது அதில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த வரவேற்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண முகக்கவசம் அணியவில்லை என்பதை வடமாகாண ஆளுநருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக அவரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரை வரவழைத்து முகக்கவசம் எடுத்து வருமாறு பணித்து அதன் பின்னர் முகக்கவசத்தினை அணிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாணத்தில் கொரோனா பாதுகாப்பிற்காக பல்வேறு உத்தரவினை பிறப்பிப்பதுடன், வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் கொரோனா பாதுகாப்பு முகக்கவசத்தினை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அங்கிருந்தவர்களுக்கிடையே சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK