ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் நாற்பது (40) போராளிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்
நிந்தவூரில் நேற்று (06) அல்ஹாஜ் ஜெஸூலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தின் ஐந்தாம் (5) இலக்கத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அஸ்ரப் தாஹிர் அவர்களின் வெற்றியை உறுதி செய்து தலைமையின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் கட்சியில் இணைந்து கொண்டனர்.
இதன்போது கட்சியின் நிந்தவூர் முக்கியஸ்தர்கள் மற்றும் இறக்காம அமைப்பாளர் முனாஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.