எதிர்கால சந்ததிகளின் நலன்களை சிந்தித்து ‘புள்ளடி’ என்ற ஆயுதத்தைப் பொருத்தமாகப் பிரயோகிப்போம்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து நாட்டில் முன்னெடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்கள்தற்போதைய அரசியல் நிலைஎதிர்வரும் பொதுத் தேர்தலின் நிலைப்பாடு என்பன தொடர்பில்கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் வழங்கிய விஷேட பேட்டி
நேர்காணல்:  . ஏ. காதிர் கான்... 
கேள்வி  : உங்கள் வாழ்க்கை நிலைபற்றி கூறமுடியுமா...?

பதில்     : சுபீட்சத்தை நோக்கிய இலக்கின் ஆரம்ப கர்த்தாவாகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினைக் கொண்ட நான், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டலின் ஊடாக, 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன்.

உடுநுவர தேர்தல் தொகுதியின் எலமல்தெனிய எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், எனது ஆரம்பக்கல்வியை தெல்லங்க அஸ் - ஸிராஜ் ஆண்கள் வித்தியாலயத்திலும், உயர் தரக் கல்வியை கம்பளை ஸாஹிரா தேசியப் பாடசாலையிலும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், எனது தொழில் நிமித்தம் கொழும்புக்குச் சென்று, ஹோட்டல் துறையில் பிரவேசிக்கும் வாய்ப்பினையையும் பெற்று, இறை அருளால் இன்று அதே துறையில் சர்வதேசப் புகழை நம் தாய் நாட்டிற்கு ஈட்டித் தரும் வகையில் (International Star Hotels Chain)> சர்வதேச ஹோட்டல் தொடராகிய “Intercontinental Hotels Group” இனை இலங்கைக்கு அறிமுகம் செய்யக் கிடைத்தமையானது, எனது விடா முயற்சிக்கும் இறைவன் எனக்களித்த முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவப் பண்புகளுக்கான சர்வதேச அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.

எனினும், கண்டி மாவட்டத்தில் உடுநுவர தொகுதியை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட நான், எதிர்வரும் காலங்களிலும் சமூகத்துக்கான பணிகளை இங்கிருந்தே மேற்கொள்வேன் என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி    : இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றி நீங்கள் கூறும் அறிவுரை என்ன...?

பதில் : எமது தாய் நாட்டினை 30 வருட கொடூர யுத்தத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக, அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்து தலைமைத்துவத்தை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவின் பங்களிப்பு மகத்தானது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

2015 ஜனவரி மாதம் வரை மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தினை வீழ்ச்சியடையச் செய்து, ஆசியாவிலேயே குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தினைக் கொண்ட நாடாக கடந்த அரசாங்கம் எமது நாட்டினை மாற்றிச் சென்றது. இந்நிலையில், பெருந்தொகையான மக்களின்; வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டின் எதிர்காலத்தை கையேற்கத் திடசங்கற்பம் பூண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 நவம்பர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வரலாறு காணாத 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று, எமது தாய்த் திருநாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

கேள்வி    : கொரோனா தொற்றின் பரவல் தொடர்பாக ஜனாதிபதி எடுத்துள்ள நிலைப்பாடு என்ன...?

பதில் : இந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகள் உள்ளிட்ட அனைத்து அரச துறைகளினதும் உயர் தியாகத்தின் மூலம் கொரோனா தொற்று பரவல், ஜனாதிபதியின்; வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் முழு உலகுக்கும் முன்மாதிரியான வகையில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் இக்கட்டான இவ்வாழ்க்கை, படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும்; இத்தருணத்திலே, அனைவருக்கும் பொது மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது தொடர்பில் அவசரமாக இயங்கிய ஜனாதிபதியையும் பாராட்டுகின்றேன்.



கேள்வி    : அரச ஊழியர்கள் தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்...?

பதில்                 : இன்று அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியம் இன்மை, நியமனங்கள் மற்றும் இடமாற்ற சீர்கேடுகள் போன்ற பதவி உயர்வுகளில் சரியான தெரிவு இன்மை மற்றும் அவைகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமை ஆகியன மிக முக்கியமானவைகளாகும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரச ஊழியர்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து,  அவர்களது சுய மரியாதையையும்; தொழில் சார் கௌரவத்தையும் பாதுகாப்பேன். அதன் மூலம் அவர்களினதும் முழு நாட்டினதும் சுபீட்சத்தின்; இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும், வழிகாட்டல்களையும் வழங்குவேன்.  அத்துடன், ஜனாதிபதியின் கரங்களை வலுவடையச் செய்யும் சுபீட்சத்தை நோக்கிய பயணத்திற்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.

கேள்வி    : இறுதியாக, முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் உங்கள் கருத்தென்ன...?

பதில்      : எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் ஹஜ் மற்றும் உம்ராக் கடமைகளுக்காக, பூரண அரச ஆதரவைப் பெற்றுத் தருவதிலும், தமது கலாசாரத்துக்கு ஏற்ற வகையிலான ஆடைகளை நாட்டின் எப்பாகத்திலும் சுதந்திரமாக அணிவதற்குத் தேவையான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் நான் முன் நிற்பேன். அத்துடன், இவைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்புவேன்.                                                  

இறுதியாக நான் கூறுவது, நாட்டில் வாக்குரிமை பெற்று வாழும் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பே, எதிர் நோக்கியுள்ள  பாராளுமன்றத் தேர்தலில்  வாக்களிக்கக் கிடைத்துள்ள சந்தர்ப்பமாகும். அதனால், நமது எதிர்காலத்தையும், சந்ததிகளின் வருங்கால வாழ்வையும், பிற சமூகங்களின் நலன்களையும் சிந்தித்து ‘புள்ளடி’ என்ற ஆயுதத்தைப் பொருத்தமாகப் பிரயோகிப்போம்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK