SLPC இன் பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில்வேலவர் நியமனம்




இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPC) பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகத்துறை அமைச்சில் வைத்து வழங்கினார்.

1973 ஆம் ஆண்டின் இலங்கை பத்திரிகை சபையின் 5 ஆம் இலக்க சட்டத்தின் 3 (1) B மற்றும் 4(4) ஆகிய பிரிவுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

திரு. செந்தில்வேலவர் கடந்த 33 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி வருவதுடன் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். அத்துடன் பல்வேறு அமைப்புகளின் உயர்பீட உறுப்பினராகவும் இவர் இருந்து வருகின்றார்.

இலங்கையில் அரசாங்கத்தினால் ஊடகத்துறை அமைச்சினால் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அரசு அங்கீகாரம் பெறவுள்ள ஊடகவியளாளர்களுக்கான ஊடகக் கற்கைநெறி தொடர்பான 15 பேரடங்கிய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரே ஒரு தமிழ் ஊடக உறுப்பினராகவும் இவர் செயற்பட்டு வருகிறார்

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்