நிர்வாகத்தில் நிகழும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்படும்



  •  விளையாட்டு அமைச்சு  செலவழித்த ஒதுக்கீடுகளின் முன்னேற்றத்தை உடனடியாக கணக்காய்வு செய்யுங்கள்.
  • விழாக்கள் நடத்துவதற்காக பணம் மற்றும் அரச வளங்களை வீணடிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.
  • விளையாட்டுத் துறையில் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகளைத் தடுக்க அவசர வேலைத்திட்டம் ஒன்று தேவை.
  • அரசாங்க நிறுவனங்களில் மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு
  • ஒதுக்கப்பட்ட செலவினங்கள் குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் விளையாட்டு அமைச்சின் முன்னேற்றம் தொடர்பில் முறையான கணக்காய்வு தேவை எனவும், கூடிய விரைவில் உள்ளக கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார்.


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று  (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
“பிரதமர் என்ற முறையில், எனது பொறுப்பில் உள்ள அனைத்து அமைச்சுக்களிலும் நடக்கின்ற   நடக்க வேண்டிய விடயங்களை   அடையாளம் கண்டு வருகிறேன்.
ஒரு அரசாங்கம் என்ற வகையில், அரச  நிதியின் வீண்  விரயம்  குறித்து நாங்கள் மிகவும் அவதானத்துடன்  செலவினங்களைக் கட்டுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  செலவழித்த பணத்தில் என்ன நடந்தது என்பதை  விரைவாக உள் கணக்காய்வு செய்யப்படும்
அரசு நிறுவனங்களில் நடந்த பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரிக்க நிறுவனக் குழுக்கள் நியமிக்கப்படும் . அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தில் நிகழும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டு அமைச்சகத்திடம் குறிப்பிட்ட திட்டம் இல்லை. எனவே, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள நிறுவன அனைத்துத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு.

தமிழில் அஸீம் கிலாப்தீன் 




News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்