ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

முன்னாள் அமைச்சரான தற்போதைய கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச். எம் ஹலீமுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்  தெரிவிக்கையில்... 

‘அண்மையில் நான் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டேன். இருப்பினும் நேற்று (12)  எனது உடல் நிலையில் சற்று தளர்வு காணப்பட்டதால் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டபோது அதில் எனக்கு கொவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை ,நான் இன்று பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளேன்.

எது எவ்வாறிருப்பினும் 14 சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவே நான் தீர்மானித்துள்ளேன்.

மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு என்னை சந்திக்க வருவதனை ஆதரவாளர்கள், பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டக் கொள்கிறேன் என  தெரிவித்தார்..