கொரோனா ஜனாஸாக்களை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியும் என்றே நிபுணர் குழுவாக நாம் முடிவை அறிவித்துள்ளோம் - Prof. ஜெனீபர் பெரேரா




கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு தமது குழு அனுமதி வழங்கியதாக கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனிஃபர் பெரேரா தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விசேட பரிந்துரைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சின் செயலாளர் S.H.முணசிங்கவினால், கடந்த டிசம்பர் மாதம் விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கை உரிய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றில் உயிரிழந்தோரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்பதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளையும் நடத்த முடியாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றில் உயிரிழக்கும் ஒருவரின் உடலை 24 மணித்தியாலத்திற்குள் தகனமோ. அடக்கமோ செய்ய வேண்டும் என தாம் பரிந்துரை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்

சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்றால், நீருடன் கலக்காத வகையில் இரண்டு பைகளில் சடலத்தை இட்டு, சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொவிட் தொற்றில் உயிரிழப்பவரின் சடலத்தை, அவரது உறவினர்கள் நால்வருக்கு 5 நிமிடமேனும் காண்பிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK