சிகரம் தொட்ட சிரசு


அக்கரைப்பற்று அரசியலில் துடிப்புள்ள ஒரு வாலிபம் நுழைந்த காலமது (2006). இம்மண்ணுக்கு இவ்வாலிபத்தின் கனதியை அடையாளம் காண்பதற்கு கன நாட்கள் தேவைப்பட்டிருக்கவில்லை. தொட்ட பணிகளை துலங்கச் செய்வதில், இவன் விழித்திருந்து செயற்பட சளைத்ததும் இல்லை.எஸ்,எம் சபீஸ் என்ற இந்த வாலிபத்தின் வெற்றிக்கு வழிகளைத் திறந்த, பின்புலங்களும் இவைதான்.சமூகப் பணிகளை சாஷ்டாங்கமின்றிச் செய்வது, பொறுப்புக் கூறலில்,இவருக்கிருந்த பக்குவம் என்பவைதான் இவரது ஆளுமைகள்.எஸ்.எம் சபீஸின் இவ்வாறான அடையாளங்கள், அவர்மீதான சமூகப் பணிகளை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்யத் தொடங்கியது.இதனால்,அரசியல் என்ற சமூகப்பணியுடன் பள்ளிவாசல் தலைமையை ஏற்கும் விதியையும் இறைவன் இவருக்கு எழுதியிருந்தான். அக்கரைப்பற்றின் முதற் பள்ளிவாசலான ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைமைத்துவமும் எஸ்.எம் சபீஸை தேடிவந்த பொறுப்புத்தான். இவரது நேரிய சிந்தனைகள் சமூகத்தில் நிலைத்துவிடுவதற்கான அடையாளங் கள்,அவரது அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே தென்படத் தொடங்கியதை,பலரும் அடையாளம் கண்டனர்.எந்த நோக்கத்திற்காக தனது தந்தை உயிரிழக்க நேரிட்டதோ,அதை உயிர்ப்பிப்பதில் உயிர் மூச்சாக நின்று உழைப்பவர் இவர்.அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராவதற்கான வாய்ப்புக்கள் சொற்ப வாக்குகளால், விலகிப்போனாலும் நெஞ்சுறுதியோடு செயற்பட்டதால்,மக்களுக்கு நெருக்கமான உறவாகத் தலையெடுத்தார்.பிரதேச சபைத் தவிசாளர்,மாநகர சபை உறுப்பினர் என விரியும் இவரது மக்கள் பணிகள், எதிர்காலத்தில் உயரவுள்ள சூழலில், பள்ளிவாசல் தலைவராகத் தெரிவாகி, தற்போது அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் பதவியும் இவரது,சிரசில் சுமத்தப்பட்டுள்ளது."நாம் நாடியோருக்கு அதிகாரங்களைத் திணிக்கிறோம்,நாம் நாடியோரின் அதிகாரங்களைப் பிடுங்கி எறியவும் செய்கிறோம்"எனப் புனித குர்ஆன் கூறுகிறது.நாடிவிட்டான் என்பதற்காக எஸ் .எம் சபீஸ்,சஜ்தாவில் தன் சிரசைத் தாழ்த்திவிட்டான்.பதவிகள் கிடைத்ததற்காக மட்டுமல்ல,பணிகள் செவ்வனே,சிறப்புடன் இறை திருப்தியில் தொடர வேண்டும் என்பதற்காக. நாடுகின்ற இறைவன் நல்லதை நாடட்டும்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK