இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கையிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று (24) புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் இறுதியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு தொடர்பில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இன்று காலை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்துள்ளது.

குறித்த சந்திப்பு இன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முன்னர் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது முகநூல் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்