பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இராஜாங்க செயலாளராக ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.