கோவிட் தடுப்பூசி பற்றி தமக்கு நம்பிக்கை கிடையாது என தம்மிக்க பாணியைத் தயாரித்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கோவிட் நோய்த் தொற்றை இல்லாதொழிக்கக்கூடிய பாணி மருந்து ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பண்டார ஊடகங்களில் கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தம்மிக்க பண்டார கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது போன்றதொரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

எனினும் தாம் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தம்மிக்க பண்டார திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமக்கு சேறு பூசும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி தாம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் பாணியை தயாரித்து வருவதாகவும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மருந்தை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.