ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 06 பெண்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் தற்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.