கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மீண்டும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

மூன்று வார சிகிச்சையின் பின்னர் கடந்த ஒரு வாரகாலமாக ஓய்வெடுத்திருந்த அவர் இன்று (23) தமது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

தற்சமயம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 4714 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.