இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24 ஆம் திகதி நடைபெற்றது. சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,  தெரிவித்த விடயங்களை இங்கு மிகவும் பொறுப்புடன் சுருக்கித் தருகிறோம்,

இந்தப் பேச்சின் போது, இலங்கை முஸ்லிம்களின் விவகாரம், ஜனாஸா எரிப்பு விவகாரம் என்பன முக்கிய இடத்தை பிடித்திருந்தன. இதன்போது, ஜனாஸா விவகாரம் குறித்து தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் கதைத்தேன் அவர்களிடமிருந்து சாதக பதில் கிடைத்துள்ளது.

எனினும் இவ்விவகாரங்களை விலாவாரியாக, நாம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முழு இணக்கம் வெளியிட்டுள்ளனர். இச்சந்திப்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பு பற்றிய முழு விபரங்களையும் பதிவேற்றுவதை, சில நலன்கருதி தவிர்த்துக் கொள்கிறது.