இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக றிசாத் பதியுதீனும், பிரதி தலைவராக ரவூப் ஹக்கீமும் தெரிவு.


இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.அரவிந்த குமார் மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் இச்சங்கத்தின் உப தலைவர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை-பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே நிறைவேற்றுக் குழு மற்றும் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் ஹகட்டாகும் கலந்துகொண்டிருந்தார்.

இச்சங்கத்தின் உதவிச் செயலாளராக வடிவேல் சுரேஷ், பொருளாளராக வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனைவிடவும், பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், துஷார இந்துனில் அமரசேன, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய, அலி சப்ரி ரஹீம், கனஹ ஹேரத், ஜகந் புஷ்பகுமார, ஜயந்த வீரசிங்ஹ, ஜகத் குமார, குலசிங்கம் திலீபன், வேலு குமார், பைசல் ஹாசிம், அமரகீர்த்தி அதுகோரல, மதுர விதானகே, சாமர சம்பத் தஸநாயக்க, உதயன கிரிந்திகொட, குணதிலக ராஜபக்ஷ, வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஜே.சி.அலவத்துவல, ரொஷான் ரணசிங்க ஆகியோர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK