சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரசா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.