நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், எதிர்க் கட்சியினர் அரசியல் இலாபங்களை தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுகம்பொல தொகுதிக்கான நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தீர்க்க முடியுமான பல்வேறு சிக்கல்களை, எதிர்க் கட்சி தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாக்கும் நோக்கில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், உயிரிழந்த நபர்களின் சடலங்கள் குறித்து எதிர்க் கட்சி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

எனினும், தாம் இனவாதத்தை ஒருபோதும் ஏற்படுத்தவில்லை எனவும், எதிர்க் கட்சியினரே மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரமேதாஸ குழுவே இவ்வாறான நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.