நிகவெரட்டிய பகுதியில் உள்ள வனப்பகுதி ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன.  கொலை செய்யப்பட்டிருந்தவர் களுத்துறை-மக்கோன பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த ஆசிரியரின் உடல் கடந்த 10ஆம் திகதி வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 08ஆம் திகதி உந்துருளியில் வந்த சிலர் ஆசிரியரை தாக்கிவிட்டு சென்றதாக காவற்துறை குறிப்பிட்டிருந்தது