குர்ஆனில் உள்ள சட்டங்களை நாட்டு சட்டத்தில் இணைக்க முடியாது என சிங்கள  ராவய அமைப்பின் அக்மீமன தயரத்ன தேரர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிளாலர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

ஒரு நாட்டில் அனைவருக்கும் சமமாக சட்டம் இருக்க வேண்டும்.வெவ்வேறு இனங்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு நான்கு திருமணங்கள் முடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்களவர்கள் இரண்டு திருமணங்கள் முடித்தால் 15 வருடங்கள் உள்ளே செல்ல நேரிடும்.

12 வயது  வயது பிள்ளைகளை திருமணம்  முடிக்க முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே சிங்கள இளைஞர் 12 வயது பிள்ளையை மணம் முடித்தால் அவரை 15 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் சிறையில் அடைக்கிறார்கள்.

ஒரு பிரிவினருக்கு ஒரு சட்டமும் இன்னும் ஒரு பிரிவினருக்கு இன்னும் ஒரு சட்டமும் இருக்க முடியாது. ஜனாதிபதி உடனடியாக இந்த சட்டங்களை மாற்றி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தை கொண்டுவர வேண்டும் என கூறினார்.