சிறு குற்றங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். கண்டி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் வெசக் தினத்தை முன்னிட்டு மேலும் சில கைதிகள் விடுதலை செய்யபப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.