உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக நிறைவடையவுள்ளது.

இன்று இடம்பெறும் இறுதி அமர்வுக்குப் பிறகு உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்தது.

அதனடிப்படையில் ஒரு வருடகாலத்திற்கும் அதிகமாக 440 பேரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.