நாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் என்றும் தாக்குதல் ஒப்பந்தம் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அதற்காக கருணா 15 கோடி ரூபா கேட்டார் என்றும் புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். துஸார பீரிஸ் என்பவர் ஞானசார தேரர் அங்கம் வகிக்கும் எமது மக்கள் சக்தி என்ற கட்சியுடன் தொடர்புடையவர்.

'பிரபாகரன்' என்ற சிங்கள திரைப்படத்தை தயாரித்தவர். சில பிரச்சினைகள் காரணமாக அந்த திரைப்படம் திரையிடப்படவில்லை. இப்போது அவர் பிரான்ஸில் உள்ளார். அங்கிருந்து நாட்டின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துவதற்காகவே இப்படியான வேலையை செய்வதற்கு திட்டமிட்டாராம். இந்தக் கொலைத் திட்டத்தை சரியாக நிறைவேற்றக் கூடியவர் கருணாதான் என்பதால் துஷாரா பீரிஸ் பௌத்த தேரர் ஒருவரின் ஊடாக கருணாவை தொடர்பு கொண்டபோதுதான் 15 கோடி ரூபா கேட்டாராம் கருணா. பேரம் பேசலில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அது பெரும் தொகை என்பதால் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் நாமல்.