நாட்டினுடைய சகல இன மக்களினதும் எதிர்காலம் குறுகிய அரசியல் இலாபத்தினால் கேள்விக்குரியாகும் நிலை தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களின் கைது முயற்சியினால் தோன்றியுள்ளதாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கழுத்த்துறை மாவட்ட அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரைக்கார் தெரிவித்துள்ளார். மக்கள் இறைமையின் மூலமான வாக்குரிமையை பாதுகாப்பதற்காக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்வதன் மூலம் தற்போதய  உலக அரசியல் ஒழுங்கில் வித்தியாசமான எதிர்  பெயரினைப்  பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அரசாங்கமானது தனது தோல்விகளை மறைக்கவும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமான முயற்சிகளில் ஈடுபடும்போது சிறுபான்மையினரை இலக்கு வைக்கின்றனர். தான் சார்ந்த சமூகத்திற்கும் மட்டுமல்லாது ஏனைய இன மக்களுக்கும் சேவை செய்து தன்னுடைய தேர்தல் மாவட்டத்தில் முன்னிலையில் வெற்றிபெற்ற ஒருவரை சிறையிலடைக்க முயற்சி செய்வது நாட்டின் நிலையான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒன்றாகும். உணர்வுசார்ந்து அறியாத மக்களை கொந்தளிப்பு நிகழ்ச்சிகளை உருவாக்கிவிட்டு வேறொரு கோணத்தில் தனது இயலாமையை மறைப்பது முழு நாட்டிற்கும் கேடாகும் நிலை உருவாகியுள்ளது.

பஸ்பரம் புரிந்துணர்வுள்ள சகவாழ்வையும் அபிவிருத்தியையும் பேணுவதற்கு குறுகிய அரசியல் இலாபங்களை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனது தனது அறிக்கையில் ஹஸீப் மரைக்கார் தெரிவித்துள்ளார்.