விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

பன்னல வெட்டகேயாவ பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி




திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றி வரும் பன்னல - வெட்டகேயாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பன்னல சுகாதார சேவைகள் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர், தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி உட்பட குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பன்னல சுகாதார அதிகாரி சமா ஹேரத் தெரிவித்துள்ளார்.

பன்னல சுகாதார அதிகாரியின் அலுவலக பிரிவில் உள்ள இஹல மாகந்துர, பாஹல மாகந்துர, மெல்லவலான, பல்லேகம, போப்பிட்டிய, நாராங்கொமுவ, வெட்டகேயாவ, ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 10 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையோரின் மருத்துவ அறிக்கை கிடைக்கவுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK