20வது திருத்தம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லையெனில், அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்று அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் 20ஆவது திருத்தத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் அந்தக்கட்சி மூன்று யோசனைகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளது.
பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள 20வது திருத்தத்தை ஆய்வு செய்வதற்கான குழுவின் ஊடாக இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 20வது திருத்தம் தொடர்பில் மாற்றங்கள் எனக்கூறி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாற்றங்களில் தமது இந்த மூன்று யோசனைகளும் உள்ளடக்கப்படவில்லை என்றும் விமல் வீரவன்சவின் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment