றிசார்ட் பதியூதீனை கைது செய்து ஆளும் கட்சியினருக்கு சிறிய உற்சாகத்தை கொடுக்க முயற்சித்து வருகின்றனர் - முஜிபுர் ரஹ்மான்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொய்யான பூச்சாண்டிகளை உருவாக்கி, தென்பகுதியை அச்சமூட்டியே தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியது எனவும் தற்போது றிசார்ட் பதியூதீனை சிறையில் அடைத்து ஆளும் கட்சியினருக்கு சிறிய உற்சாகத்தை கொடுக்க முயற்சித்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தெளிவான அரசியல் பழிவாங்கல் என்பதை கூற ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. போர் காலத்தில் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட பெருந்தொகையான மக்கள் புத்தளத்தில் வசிக்கின்றனர். அவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை.

இதன் காரணமாக இங்குள்ள மக்கள் வாக்களிப்பதற்காக தமது சொந்த பிரதேசங்களுக்குசெல்ல வேண்டும். தேர்தல் நேரங்களில் அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அரசாங்கம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது வழக்கம். இது 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் நடந்தது.

2019 ஆம் ஆண்டு வாக்காளர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிக்க 250 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த பேருந்துகளுக்கான கட்டணத்தை மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு திணைக்களம் செலுத்தி இருந்தது.

இந்த பணம் வேறு எவருக்கும் செலுத்தப்படவில்லை. இலங்கை போக்குவரத்துச் சபைக்கே செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் பேருந்துகளே பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. பேருந்துகளுக்காக அரசாங்கம் செலுத்திய பணத்தை 6 நாட்களுக்கு வடக்கின் அகதிகளுக்கான அமைப்பு அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது.

தற்போது நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. றிசார்ட் பதியூதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு சென்று கைது செய்யும் ஆணையை பெற முயற்சித்த போது, நீதவான் அதனை மறுத்து விட்டார். தற்போது கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கூறுகிறார் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK