திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மதித்து நடந்துகொள்ளுமாறு குறிப்பாக பிரதேச மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் எவரும் வீடுகளை விடடு வெளியில் வரக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் பிரதேசத்தில் இயங்கும்.

சட்டத்தை மீறினால், கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

பொலிஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் செல்ல முடியும்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.