பதியுதீனின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதை தடுப்பதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தனது கட்சிக்காரரை கைது செய்ய முயற்சிப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளான பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்கன பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பீ ரணவிங்க, விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் காமினி உட்பட 7 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post